கருவறை to கல்லறை

போட்டுவைத்த பாதையில்
கோச்சு வண்டி போகுது …!
பாட்டு பாடி ஆட்டம் ஆடி
இறங்கும்வரை நாமாடலம் ….!!
பயணசீட்டு உன் மண்டையில்
எழுதிவச்சு இருக்குது …!
அதை படிதிடவோ மாத்திடவோ
முடியாது உன்கையில் ….!!
நிற்காமல் ஓடுவதே இந்த
வாழ்க்கை வண்டி ….!
உன் நிறுத்தம் அதில் இறக்கிவிடும்
எதையும் தாண்டி ……!!
பயணதூரம் வரும்வரை
நீ மகிழ்ந்தே இரு ….!
பின் நிறுத்தத்திலே மகிழ்ந்திருக்க
அனுமதி கிடையாது …!!