கனவுகள் தான் உண்மை

'கனவே'
என்
காதலின் முதல் நண்பன் நீதான்....
நீ இல்லை என்றால்
நாளை
என்னவள் சூடும் பூக்களின் வண்ணம்
தெரியாமல் போயிருக்கும் .......
நீ இருபதல்தான்
எங்களது சந்திப்பின் உரையாடல்கள் இனிமையகின்றன..
காரணம் அதன் முதல் பதிப்பு உன்னில் நடபதல்தான்....
கனவே
காதலின் 'கருவறை' நீ - உன்னால்தான்
என் காதல் வளர்ந்து இன்று
ஊனமில்லா ' குழந்தையாக' உருவாகி உள்ளது .......
கனவே
காதலின் உயர்வுக்கு காரணம் நீ
என் காதலியின் அன்பான உணர்வுக்கும் காரணம் நீ!
என்றும் அன்புடன்
அ. மனிமுருகன்