போலிகளும் உண்மைகளும்

..."" போலிகளும் உண்மைகளும் ""...

உறங்கும் நேரம் உண்மை
பொழுதுவிடிய போலிகள்
மாறி மாறி வேடம் புனைய
உறவுகளும் உணர்வுகளும்
ஆரவாரமில்லா வந்துபோகும்
நாடக மேடையாய் உலகம் !!!

நடைமுறை நாளுக்குநாள்
நானுமிங்கே மாறுகிறேன்
பண்பை மறந்த பாசங்களும்
உண்மை இல்லா உறவுகளும்
அரிதாரம் பூசாத வேசங்கள்
அன்றாடமிங்கு அரங்கேற்றம் !!!

கைகுலுக்கும் கலாச்சாரத்தில்
கலந்துமதில் கரைந்தும் நாம்
நாடகமென அறிந்தும் நம்தம்
நளினமான உறவுகளோடே
போலி புன்னகைகள் செய்தே
உண்மையாய் நடிக்கின்றோம் !!!

போலித்தனைத்தை தீயிலிட்டு
போசுக்கிடுமிந்த போகியிலே
உங்களின் போலிகளையும்
உள்ளத்திலிருந்து உதறிவிட்டு
எதார்த்தத்தின் எண்ணங்களில்
ஒன்றுபட்டு நாம் வாழ்ந்திட !!!

கவிதை வயலிலே கருத்தான
விதையை மனதில் விதைத்து
உறவோடு மனிதம் வளர்த்திட
நட்புடன் அன்பின் கைகோர்த்து
நற்பண்புகளை துணைசேர்த்த
ராபியோடு உங்கள் சகூருதீனும் !!!

என்றும் உங்கள் அன்புடன்,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்..

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (7-May-15, 3:29 pm)
பார்வை : 80

மேலே