அம்மா
சட்டுன்னு தூறிட்டு
போகும் தூத்தலில் நிற்காதே...
என்று அன்னை சொன்னது
அச்...தும்மல் வந்த பிறகுதான்
உரைக்கும்....
காய்ச்சல் வந்த பிறகுதான்
அன்னை வைத்துக்கொடுக்கும்
கஞ்சியின் அருமை புரியும்...
உடம்பிற்குள் இருக்கும் வலியை
கண்டுபிடிப்பதில்
அந்த மருத்துவரும் தோற்கவேண்டும்
அன்னையிடம்....
கணினி வேண்டாம்
கால்குலேட்டர் வேண்டாம்
எத்தனை கணக்கையும்
நொடியில்போடும்
படிக்காத மேதை இவர்கள்...
அடுக்கலையின்
அஞ்சரைபெட்டிதான்
அவசர உதவி ஆம்புலன்ஸ்
ஆகும்...
போன தீபாவளிக்கு
எடுத்த புத்தாடைதான்
இந்த தீபாவளிக்கு
நீ உடுத்தும் புதுசு...
அன்று அழகுக்காக அல்ல
அவசரத்துக்கு உதவுமேன்னு
வாங்கி சேமித்த சங்கிலிதான்
அடிக்கடி அனைவருக்கும்
உதவும் அட்சய பாத்திரமானது..
நீ செய்து கொடுக்கும்
பழைய சோற்று வடகத்தின் ருசி
எந்த பீட்ஸா பர்கரிலும்
எப்போதும் கிடைக்காது....