அம்மா

அன்பும் அருளும்
வாழையடிவாழையைப் போல
அல்லும் பகலும் -இவள்
அடியினை தொழச் செய்து
அருமை பெருமையாய்
அணைத்துக் கொள்கிறாள் மார்போடு

அறுகம்புல் விரல் நுனியினால் -எனை
அள்ளி பனித்துளியாய் நுகர்ந்தவள் இவளன்றே
அன்பினால் மனதும் நிலைத்திட
அற்புதம் யாதெனில் தாயவளை உற்று பார்க்கிறேன்
அறம் விளைக்கும் ஆண்டவன்
அண்டம் வாழ் தாயாக உருவெடுத்தானொ என்று

அகமகிழும் குழந்தை நானென்று
அவள் பூரித்து போனாலும்
அறியாள் தன் தவறினை
ஆண்டு முழுதும் வாழும்
அதிசய குழந்தை தான் என்பதினை

அஹிம்சையால் மனதினில் வந்து
அபகரித்துக் கொள்கிறாள்
அம்மாவெனும் அன்பில் -நான்
அவளிடம் அபாயமானது தெரியாமலே

அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா

எழுதியவர் : keerthana (10-May-15, 11:09 am)
Tanglish : amma
பார்வை : 338

மேலே