படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் -போட்டிக் கவிதை -காத்திருத்தல் மிகசுகமே -அபி மலேசியா a

காதலனே !ஆருயிரே !
காத்திருத்தல் மிகசுகமே !
தோழிகள் தவிர்த்தே
தூரம்நான் ஒதுங்கி வந்தேன் ..
எனக்குள்ளே வாட்டுகின்ற
பிரிவினையின் வேதனையை
இசையால் ஆற்றிக் கொள்ளும்
ஏக்கத்துடன் இங்கு வந்தேன் ...
அழைத்தணைத்து அருகினிலே
அன்புமழை பொழிவாயோ?
இப்படியே காக்க வைத்து
இன்னலுற செய்வாயோ ?
எதிர்பார்க்கும் என்விழிகள்
ஈரப்பட வைக்காமல்
காத்திருக்கும் கன்னங்கள்
நனைக்க நீ வரவேண்டும் !
உன்னோடு நான்சேர்ந்து
ஒருநூறு பாடல்கள்
உள்ளம் கலந்திங்கே
உயிரினிக்கப் பாடிடணும்...
இரகசியங்கள் நான்கூற
இரசித்ததனை நீகேட்டு
வயலினைப்போல் எனைமீட்டி
வாசிக்க வா அன்பே!...

எழுதியவர் : அபி மலேசியா (10-May-15, 6:44 pm)
பார்வை : 180

மேலே