படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் - போட்டிக் கவிதை - உனக்கே உனக்காய் ஒரு கவிதை
உன் இமைகளின் அசைவுகள்
இடைவெளியெடுக்கும்போது
என் இதயத்தின் துடிப்புகள்
ஓய்வற்றதாகின்றன...
உன் வார்த்தைகளின் வீச்சுகள்
வலுபெறும்போது
என் உரையாடல்கள் அத்தனையும்
உயிறற்றுப்போகின்றன ...
உன் மௌனத்தின் மொழிகள்
உச்சரிக்கப்படும்போது
என் கவிதைகள் எல்லாம்
பிழையற்றதாகின்றன...
உன் பிரிவின் பின்பம்
வெளிப்படும்போது
என் தேடல்கள் யாவும்
திசையற்றதாகின்றன..
போதும் சகியே .
உன் விழிக்கொடிகள் உதிர்க்கும்
உப்பு மலர்களை
இப்போதே நிறுத்திவிடு
உன் உயிர்தொட்டவன்
நானென்பதை
ஒருமுறையாவது உரைத்துவிடு ...