முதல் பலி - JADAAYU
வில் ஒன்று வரும் என்று
வரம் ஒன்று தரும் என்று
கானகத்தில் காத்திருக்கும் கிழ பறவை
வழி நெடுக பார்த்திருக்கும் அவன் வரவை,...
யாரோ வரம் கேட்க
யாரோ அதை கொடுக்க
யாரோ மனை இழக்க
யாரோ வனம் நடக்க
யாரோ அறிவிழக்க
யாரோ சிறை பிடிக்க
தான் ஏனோ உயிர் துறக்க
கானகத்தில் காத்திருக்கும் கிழ பறவை
வழி நெடுக பார்த்திருக்கும் அவன் வரவை,.