அன்னையர் தினத்தில்10052015
அன்னையர் தினத்தில் நான்.....
அன்னையென உனை நினைந்தேன்
ஆதரவாய் எமைக் காத்தாய்
இன்றளவும் இனிமைக் குறையா
ஈதலன்ரோ உனது அன்பு.......
உலகெலாம் நமைக் காத்திடும்
ஊழிக் காற்றை வென்றிட்ட
எமையாளும் எந்தன் இறைவன்
ஏற்றிய விளக்கல்லவோ எந்தனன்னை.....
ஐயம் கொள்ளா அனைவரிடம் அன்பு
ஒப்பில்லா அன்னை என்றும் நமையாளும்
ஓதி துதிக்கின்றேன் அம்மா, அம்மாவென
ஒளஷடமாய் நம் வாழ்வைக் காக்கும்.....
(அ):.தே அன்னையின் சிறப்பாகும் ........
ந. தெய்வசிகாமணி