எதிர்பார்ப்பதும் நடப்பதும்
அனல் காற்று வீசும் போது..
மழை காற்றின் மீது ஏக்கம் ..
பணியில் உறையும் போது..
வெயிலின் மீது ஏக்கம் ..
பாலை வனத்தில் இருக்கும் போது..
தண்ணீரின் மீது ஏக்கம் ..
சுட்டெரிக்கும் வெயிலில் பேருந்திற்காக நிற்கும் பொழுது ..
மரத்தடி நிழல் மீது ஏக்கம் ..
நகரத்தில் மழை பெய்யும் பொழுது ..
மண்வாசனை மீது ஏக்கம் ..
வறண்டு கிடக்கின்ற பூமிக்கோ ..
மழையின் மீது ஏக்கம் ..
உவமைகளோ ஏராளம் !!!
ஏக்கமோ தாராளம் !!!