பிரசாதம்

பாதையோர வண்டி..
நல்ல பழம் ..ஒன்று ..அதில்..
வாங்கிப் புசித்திட
யாருமில்லை..
அது அழுகவில்லை..
அதற்கு அடித்தது யோகம் ..
இறைவனின் சந்நிதியில்
சமர்ப்பிக்கப்பட்டு ..அது..
படைக்கப் பட்ட நேரம்
பெறுவதற்கு பக்தர்களும் யாருமில்லை
வெளியில் ..
உணவின்றி பசித்தவர்க்கு ..
பிரசாதமாக
கொடுக்கப் பட்ட ..
அந்த பழம்
அழவில்லை ..
அழுகவில்லை..
இறைவனை சென்றடைந்ததால் ..
அதன் பணியும் முடிந்தது..
சிலரது பசியும் அடங்கியது!