கண்ணீர் கவிஞர் இரா இரவி

கண்ணீர் ! கவிஞர் இரா .இரவி !

பிராத்தனையிலும் சிறந்தது
பிறர் கண்ணீர்
துடைப்பது !

நல்ல கணவன்
மனைவியைக் கண்ணீரின்றிக்
காப்பவன் !

இறப்பிற்கு
ஊரே அழுதால்
உத்தமன் !

இறப்பிற்கு
குடும்பம் மட்டுமே அழுதால்
தன்னலமிக்கவன் !

பிறப்பில் தொடங்கி இறப்பு வரை
தொடர்கிறது ஏழைகளுக்கு
கண்ணீர் !

துகிலுரிபவனையும்
கண் கலங்க வைப்பாள்
வெங்காயம் !

சோகத்தில் மட்டுமல்ல
மகிழ்விலும் வரும்
கண்ணீர் !
.
சிரிக்க வைப்பது சிறப்பு
அழ வைப்பது
வெறுப்பு !

அழுது பிறக்கும் மனிதன்
பிறர் அழ
இறக்கிறான் !

காரணப்பெயர் கண்ணிலிருந்து
வழியும் தண்ணீர்
கண்ணீர் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (13-May-15, 7:55 pm)
பார்வை : 114

மேலே