அம்மா

கருவறையில்
எனக்கு
இடம் தந்தவள்..............
கைவிரல்
பிடித்து
நடக்க
வைத்தவள் .......................
காரணமின்றி
நான் சிரிக்கும்போதும்
கண் சிமிட்டாமல்
கண்டு ரசித்தவள் ........................
வகுப்பறைக்கு
நான் செல்லும்போது
வருந்தினாலும்
வழியனுப்பி வைத்தவள் ................
எதற்காக
கோபம் கொண்டாலும்
என் முன்னே
மறைக்க தெரிந்தவள் ......................
இந்த உலகில்
ஆயிரம் இருந்தாலும்
தன் உலகம்
நானென்று வாழ்பவள் ..................
நான் செய்த
தவறுகளுக்கெல்லாம்
மன்னிப்பை மட்டுமே
தண்டனையாக தந்தவள் ..................
மூன்று எழுத்தில்
முழு உலகையும்
அன்பால் மட்டுமே
அரவணிதவள்...................
பாசத்தால்
பாதுகாத்தவள்..............
..............அம்மா ...................
என்னை
ஈன்றெடுத்த உனக்கு
என் ஆயுள் போதாது
பணிவிடை செய்ய .................

எழுதியவர் : (13-May-15, 10:12 pm)
சேர்த்தது : PRABAGARAN
Tanglish : amma
பார்வை : 286

மேலே