கடவுளும் தாயக்கட்டைகளும்
அன்று தொடக்கம்
அசைவற்று
விரிந்து கிடக்கிறது
பிரபஞ்சம் .
சுழல்கிறது
காலச்சக்கரம்
பின்னோக்கி
இல்லாமல்
முன்னோக்கி
மட்டும்.
அரிஸ்டோட்டல்
தொடக்கம்
ஹாக்கிங்
வரை
இதைப்பற்றியே
சிந்தித்து
மிஞ்சியது
படிப்பவர்களுக்கு
குழப்பம் மட்டுமே...
என்று கூறவில்லை
இருந்தாலும்
புரிதல் தெளிவில்
இல்லை..
கணக்குகள்
சூத்திரங்கள்
காரணமாகலாம்..
கற்றைக் கொள்கை
நிச்சயமின்மைக்
கொள்கைகளின்
முரண்பாடுகள்
தெளிந்த பின்னான
இயற்பியலுக்கான
முடிவுகள்
ஏற்கப்பட்டு
ஒர்தாயக் கட்டையின்
உருட்டலுக்கான
நிகழ் தகவில்
ஒளிந்து நிற்கிறது
நவீன இயற்பியல்.
இருந்தும்
காலத்தின் தொடக்கம்
எப்போதும் கேள்விக்
குறியாகவே...
அதனால் ....
அறிவியல்
கண்களுக்கு எட்டாத
தூரத்தில்.... புரியாத
மர்மப் பிரபஞ்சத்துள்
மறைந்து
தாயக் கட்டைகளை
உருட்டும் ஒருவர்
அன்று ஐன்ஸ்டீன்
கூறிய கடவுளாக
இருக்கலாம் ...