அவுக ஆட்சியில ரூ 3 க்கும் ரூ 5 க்கும் வயிறார சாப்புட்ட விவசாயிகள்
அவுக ஆட்சியில.... ரூ 3 க்கும் ரூ 5 க்கும் வயிறார சாப்புட்ட விவசாயிகள்...
இவுக ஆட்சியில...... ரூ 9 லட்சத்துக்கும் வாட்சும்...45 ஆயிரத்துக்கு செருப்பு போடும் விவசாயிகள்...
மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சவுத்ரி பிரேந்தர் சிங் விவசாயிகளின் கூட்டத்தில் தான் இவ்வாறு பேசினார்...
என்னுடைய கைக்கடிகரத்தின் விலை என்ன தெரியுமா? ரூ.9 லட்சம்.
நான் அணிந்திருக்கும் காலணியோ ரூ.45 ஆயிரம்.
இதுபோன்ற விலை உயர்ந்த பொருட்களை யார் வேண்டுமானாலும், ஏன் ஏழை, எளிய மக்கள் கூட தற்போது வாங்கி அணிய முடிகிறது என்றார்.
இதனை தொழிலதிபர்கள்தான் அணிய வேண்டும் என்பது இல்லை, விவசாயிகளும் அணியலாம் என்று பேசியுள்ளார்.
ஆக.....விவசாயிகள் லட்ச ரூபாய் வாட்சும்...லட்ச ரூபாய் செருப்பும் போடாமல்....வேண்டுமென்றே ஏழைகளாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல வருகிறார் பாஜக அமைச்சர் எனலாம்...
- சங்கிலிக்கருப்பு -