இது எல்லாம் போதாதுங்கிறான் என்னவன்
புடைக்க நேம்ப எல்லாம்
எனக்கு தெரியாது -ஆனாலும்
நான் ஒன்னும் டாட்டா பிர்லா
மக இல்லங்க ...
கஞ்சிக்கு செத்தவதான் நான்
கழனி காடு வரப்பை மிதிச்சது
இல்லை அதுக்காக -நான்
பில்கேட்ஸ் மக இல்லங்க ...
நடவு நடலமானு நெனச்சேன்
பெய்யுற மழைக்கு எங்கடி
நெல்லு விளைய போகுதுன்னு
அம்மா சொல்லிடுசிங்க ...
கொள்ளு பிடுங்க கத்துக்க
நெனச்சேன் என்னை மாதிரி
நீயேன்மா கஷ்டபடுற
காலேஜுக்கு போய்படிமானு
அப்பா சொல்லிடுசிங்க ....
எதோ இருக்கிற நேரத்துல
எதாவது ஒன்னுரெண்டு வேலை
கத்துக்கலாம்னு நெனசிங்க அட
அதுக்கு பாருங்க நம்ம வீட்டுல
நிலமெல்லாம் இல்லங்க ......
இருந்தாலும் எனக்கு களை
கொத்த தெரியுமுங்க .நல்லாவே
நெல் அறுப்பேணுங்க அட அதை
உரலில் போட்டு குத்த கூட
தெரியுமுங்க ..இது எல்லாம்
போதாதுங்கிறான் என்னவன் ... ...

