ஓர் இயலாதவனின் கூக்குரல்

மானம் கெட்டவர்கே....மரியாதை அதிகம்,
மனசாட்சி கொன்றவர்க்கே....பொருட்செல்வம் குவியும்,
இதயம் இல்லதாவர்க்கே....இரு கை நிறைந்து வழியும்,
ஏமாற்றி வாழும் பதர்களுக்கே....அடுக்கடுக்காய் ஏணிகள் விழும்,
பிறர் உழைப்பை சுரண்டியவர்க்கே....உச்சத்தில் கொடி பறக்கும்,
கொள்ளைக்கூட்டத்தலைவனுக்கே....காவலன் பதவி நாடி வரும்,
வெளி வேஷசம் போடுபவர்க்கே...மாலையும் சந்தனமும்,
வேசியாய் இரவில் படர்ந்தவளுக்கே...காலையில் கண்ணகி வேஷசம்
பசியாற்ற வயலில் உழத்தவனுக்கே....பசியில் வாடும் ஆவலம்,

தகுதியும் திறமையும் ஊமை இந்த சமூகத்தில்,
வாய்ப்புகள் பல கதவை தாண்டி வருவதற்க்குள்
ஊனம் ஆகீ மூடமாகிப்போகிறது..!
குறைகள் நிறைந்து நிறைகளை தேடும்
கேடுகெட்ட வாழ்க்கை இது..!
தவறுகள் செய்து செய்து சரியானவை
தவறாக பார்க்கும் நோட்டம் வந்தது..!
திருத்தமுடியாது திருந்த வழியும் தெரியாது,
குப்பைக்குள் குதித்தபின் மூக்கை பிடித்து என்ன பயன்....!
ஊமையான பின்பு..ஏழுபது மொழி அறிந்து என்ன பயன்....!

எழுதியவர் : தங்கமரியாப்பன் (20-May-15, 6:14 pm)
பார்வை : 195

மேலே