மழையென்பது யாதென
இன்பத்தமிழின் சிறப்பெழுத்தோடு
ஐகாரத்தை இணைத்து ஒலிக்கும்
ஐம்பூதங்களில் ஒருத்தி .
பசியையும் பஞ்சத்தையும்
பூமியெனும் பிச்சைப் பாத்திரத்தில்
அள்ளி அள்ளி போடும் அலுமுண்டக்காரி
அவளொரு பன்முக காதலி ...
இந்திரலோகத்து இளவரசி
பிச்சைகாரனையும் பிசிறாமல்
காதலிக்கும் கன்னிப்பெண்ணவள்
சாக்கடை சேற்றில்
பிண்ணிப் பிணைந்து சரசமாடும்
சமத்துவக் காதலி .
செந்நாயின் நாச்சொட்டும்
நீரினை பருகத் துடிக்கும் நவ்வியின்
நிலையறியா நயவஞ்சக காதலி .
உப்புநீரிலும் ஒவ்வாமையை ஒதுக்கி
மன்மத கலையில் இராமுழுக்க
மூழ்கிக்கிடக்கும் கலாப காதலி ...
மிசையை அவலாக்கி அவலை
மிசையாக்கி மானிடனின் ஆறடி
நிலத்தை கையகபடுத்தும் அநியாய காதலி...
கண்ணியம் தவறி .கடமை மறந்து
காலத்தை பொய்பித்துக் கொண்டிருக்கும்
பொய்காதலி ,
எத்தனை தவறிழைத்த போதிலும்
மனந்திறந்து மண்டாடுகையில் தலை
முதல் தாள்வரை சூட்டினை தணலாக்கி
என்னை ஆசுவாசபடுத்தும்
என்னினிய தோழியவளொரு
பன்முக காதலி ....
(இந்த தலைப்பை பற்றி எதுவும் எனக்கு தெரியாது பிடித்து இருந்தது எழுதிவிட்டேன் தலைப்பு கொடுத்தவருக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன் )