மனம் பறி போனது-கவிஞர் முஹம்மத் ஸர்பான்

நான் வழமையாக செல்லும்
சாலையில்,புத்தம் புது மலராய்
புத்தம் புது வரவாய்,என்
இளமையை சீர்குலைக்க பெண்
குலத்தின் தேவதையாய் ஒருத்தி வந்தாள்.

பூங்கோதை அழகோ?ஆயிரம்
கம்பன் கவிதைகள் அவளுக்கு
இரண்டு தோழிகள்.மூத்த தோழி
நிலா.இளைய தோழி மலர்.

அவள் விழிகள் தரையை
விட்டு எழவில்லை.யாக்கை
மூடிய துப்பட்டா நாணத்தால்
தென்றலில் ஆடவில்லை.அவள்
பேசுகிறாள்,இதழும் பிரியவில்லை
வார்த்தை செவியில் கேட்கவில்லை
என்னவோர் அடக்கம்.

கன்னி என்னை கடந்து சென்றால்
அந்த நிமிடம் என்ன தான் நடந்ததோ?
எனக்கு இன்று வரை தெரியவில்லை
ஆனால் என்னிருந்தும் ஏதோ ஒன்றை
களவாடிக் கொண்டாள்.

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (21-May-15, 2:15 pm)
பார்வை : 118

மேலே