கந்தர்வ காதலி
மலை முகடினில் மனம் தத்தி தாவுது
செடி கொடிகளின் ஊடே இழைந்து ஓடுது
கந்தர்வ காதலி கண் புருவம் இடையில்
என் உயிர் அம்பாய் வில்லில் நாண் ஏறுது
பச்சை புல்வெளி கம்பளம் விரித்தது
வாய்க்கால் வரப்பு தலையணை ஆனது
கந்தர்வ காதலி கண் புருவங்களின் இடையில்
என் உடல் சொகுசாய் கண் அசர ஏங்குது
ஆழ் கிணற்றின் படிக்கற்கள் தனிமை கொடுக்குது
மீன் கூட்டங்கள் நீந்தாமல் வேடிக்கை பார்க்குது
கந்தர்வ காதலி கண் புருவங்கள் இரண்டும்
என் மார்பின் மேலே எழுத்தாணியாக மாறுது
ஒற்றை பனை மரம் தெய்வம் ஆனது
காட்டு பூக்கள் மாலை தோளில் சேர்ந்தது
கந்தர்வ காதலி கண் புருவங்களின் இடையில்
என் விரல் நகக் கீறல் சிந்தூரம் இட்டது