வெளிநாட்டில் உயர் கல்வி !

சொந்தங்கள் தவிக்கவிட்டு
சோகங்கள் சுமந்துகொண்டு
எதிர்க்காலம் கருத்தில் கொண்டு
எனை நானே வதைத்து கொண்டு
வெளிநாட்டில் கால்பதித்தேன் அன்று ...

பட்ட அடிக்கில்லை ஈடு இணை ?
பட்டினி சாவிற்கு கிடைக்குமா பிணை ?
பற்றை காட்டில் தொலைந்து போனேன் இன்று ..

விலை இன்றேல் இங்கு விஷயமே இல்லை
கலைவாணி கூட இங்கு காசின் பிள்ளை ...

வேதனத்துக்காய் வேலை செய்து வேதனையை
பெறுவதும் , சோலையிலே போனாலும் சோக முள் தைப்பதும் தான் இங்கு வாடிக்கை !

படிப்பு கூட இங்கு படி உப்பாய் துவர்க்கிறது
பணமற்ற எங்களின் இறைமையை இந்த
பட்டணம் சுவைக்கிறது

எதிர்காலம் கேள்விக்குறி ?
கரை சேர ஏது வழி ?

எழுதியவர் : நிஷான் சுந்தரராஜா (7-May-11, 5:18 pm)
சேர்த்தது : Nishan Sundararajah
பார்வை : 663

மேலே