காவியத் தலைவன்

மேகத்தில் மெத்தை
மோகத்தில் தத்தை
காதலின் சிந்தை
மயக்கியதே என்னை

வீரனே உன் பார்வை
வீழ்த்தியதே என்னை
தீரனே உன் மென்மை
திருடியதே பெண்ணை

கரங்கள் தீண்டிய போது
கரைந்தேன் கனவுகளோடு
நாயகன் நெருங்கிய போது
நாணினேன் நளினத்தோடு

மனம் முழுவதும் உந்தன் எண்ணம்
மாறியதே என் வாழ்வின் வண்ணம்
கனியென மின்னும் உன் கண்ணம்
கன்னி மனம் மயங்குவது திண்ணம்

மலரிதழ் அளித்த முத்தம்
மனதினில் நிலைத்தது நித்தம்
நீ மட்டும் தெரிகிறாய் அது ஏனோ?
என் உயிரின் மூச்சு நீ தானோ ?

நிலவு போல் அழகிய முகம் – உன்
நிழல் கூட அளிக்கும் சுகம்
வில்லாய் வளைந்த புருவம் - நீ
விலைக்கு இல்லா உருவம்

வார்த்தைகள் வேண்டாம்
வாக்கியம் வேண்டாம்
வாள் விழி போதுமே
உன்னைப் புரிந்து கொள்ள

சாட்சியும் வேண்டாம்
சாதியும் வேண்டாம்
உள்ளம் போதுமே
உன்னுள் உறைந்து வாழ !

எத்தனை பிறவியோ நான் அறியேன்
பிறந்தால் நிச்சயம் பெண்ணாவேன்
உன் கரம் பற்றிடக் காத்திருப்பேன்
உன் மணி மார்போடு மலராவேன்


-அரங்க ஸ்ரீஜா

எழுதியவர் : அரங்க ஸ்ரீஜா (24-May-15, 7:01 am)
பார்வை : 195

மேலே