விளங்கியதோ இல்லையோ

நீயும், நானும் ஒண்ணு 
சொல்லி நகர்ந்தது 
நத்தை 

கோபத்தை அடக்கி 
எப்படி 
என்றேன்.... 

உடலமைப்பு வேறு வேறு 
இருந்தும் 
ஒரு தாய் வயிற்று 
பிள்ளைகள் நாம்... 

புரியலையே... 

நீ கனி எனில் 
நான் இலை 
பூமி என்கின்ற 
பெரு மரத்தில்.... 

விளங்கியதோ இல்லையோ 
கொஞ்சம் 
தொலைந்தது மமதை...

எழுதியவர் : (24-May-15, 9:32 am)
சேர்த்தது : அறவொளி
பார்வை : 54

மேலே