நட்பு

நட்பு!!
உத்தமன் என்றுரைக்க
ஆதாரம் ஏதுமில்லை
அவதாரம் வேண்டவில்லை
எனை புடம் போட்டும் வைக்கவிலலை
நம்பிக்கை கொண்டதனால்
நாளும் பலர் என்னுடனே
கலந்துவிட்ட பந்தியுணவாய்
நாளுதெரு மணக்கிறது
கண்களிலே சத்தியமும்
கைகளிலே கச்சிதமும்
கவர்ந்திட்ட சக பாடிகளும்
துரம் விட்டுச் செல்லவில்லை
ஒன்றாயுரைந்து ஒதி
ஊர் பலிக்க வீதி சுற்றி
பயின்றிடா சமையல்செய்து
பழஞ்சுவை இனிக்கிறது
நட்பு என்னில் குறையவில்லை
நண்பரும் குறையவில்லை
சுயநலம் சேர்ந்திடாமல்
சாகும்வரை பயணிக்கறேன்