புயலின் மறுபக்கம் பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறனாய்வு போட்டி

மனிதனின் மனத்தை உயர்த்துவதன் மூலம் அவனை மேலும் உரம் கொண்டவனாக ஆக்குவதுதான் எழுத்தாளனின் சிறப்பு.

கடந்த காலத்து உன்னத மான உணர்வுகளாக மதிப்பு,தன்னம்பிக்கை,பேராற்றல்,
பேராண்மை,இரக்கம்,அவலம்,தியாகம் ஆகியவை நினைவுப்படுத்துவதன்மூலம் உயர்ந்த தளத்திற்கு அவர் மனதை அழைத்துச் செல்ல இயலும்.

கவிஞர் பொள்ளாச்சி அபி அவர்களின் சிறுகதைகளில் "புயலின் மறுபக்கம்" எனும் கதையில் வரும் கதாபாத்திரங்களில் தேவகி பாத்திரம் நெஞ்சை பிழிகிறது.அவள் படும் துயரங்கள் இங்கே எடுத்தாண்டுள்ளார் ஆசிரியர்.

இனக் கலவரத்தில் மாண்ட கணவனின் சடலம் கண்டு துடித்தாள்.கணவனின் நினைவுகள் அவ்வப்போது மனதை உளியால் இடிப்பதுபோல் இருந்தது.அவளின் துயரம் நெஞ்சைப் பிழிகிறது.

சொந்தங்கள் துரத்த குழந்தைகளோடு அனாதையானாள்.திக்குத்தெரியாமல் திசைதெரியாமல் துவண்டாள் துடித்தாள்.இவ்வித சோக முடிவால் விக்கித்து நின்றவள்.உணா்வுகளை நன்கு உரைத்துள்ளார் ஆசிரியர்.

சமுதாயவர்க்கஙகள் நடத்தும் நடப்பியல் வாழ்க்கையை மக்கள்படும் அல்லல்களை திறம்பட கையாண்டுள்ளார் ஆசிரியர்.
இறுதியாக ஒவ்வொரு சடலத்திற்கும் சொந்தங்கள் வரும்போது தேவகி,"இறந்தவர் என் கணவர்" எனும் போது துக்கம் சொன்ன நொடியில் தொண்டைக்குழியை பதம் பார்க்கிறது இங்கேஆசிரியரின் நடை திறம் மிளிர்கிறது".மதம் என்பது வெறும் உள்ளாடைதான் "என்று சிந்திக்க வைக்கிறார் சிந்தனை சிற்பி அபி அவர்கள்..!

எமது சொந்த படைப்பு
அன்புடன்
ஜெயராஜரெத்தினம்

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (25-May-15, 6:49 pm)
பார்வை : 326

சிறந்த கட்டுரைகள்

மேலே