தப்பாதுத் தாயின்சொல் தான் --- வெண்பா

அம்மாவின் சொல்லதனை அன்புடனே பற்றியிங்கு
வம்பாகப் பேசாது வாழ்ந்துவர---- நம்வாழ்வில்
எப்போதும் வெற்றியும் எட்டிவிடும் என்மகனே
தப்பாது தாயின்சொல் தான் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (26-May-15, 9:59 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 113

மேலே