அம்மா என் உயிர்

உசிருக்குள்ள உசிருவச்சு வளர்த்தாளே
உசிர பணயம் வச்சு என்னவ பெத்தாளே
உசிரு போகும் வலியிலும் என்முகம் கண்டு சிரிச்சாளே
உடல் சூட்டில் எனை அணைச்சு பாசமுத்தமிட்டாளே
உதிரத்த பாலாக்கி உணவாக தந்தாளே
உலகத்தை நான்காண உதவியும் செய்தாளே

தவளும் வயதிலே தவறாம பாத்தாளே
தவறிநான் விழுதாலோ அழுகையிலும் அவளுக்கு பங்கு தானே
தவறுகள் நான்செய்ய செல்லமாய் தடுத்தாளே
தவறுகள் மிகைக்காதுபோக கண்டிப்புடனும் வளர்த்தாளே

சிரிக்கும் பொழுதினில் அகம்குளிர்ந்து சிரிப்பாளே
அழுகின்ற பொழுதினில் அரவணைப்பவள் அவள் தானே

உறங்கும் போதோ தலைகோதும் அவள்விரலே
எழுகின்ற போதோ பகல்நிலவாய் அவள் முகமே
படிக்கும் வயதிலோ வீட்டு பாடம் அவளே
கொதிக்கும் காய்ச்சலிலோ முதல்மருத்துவரும் அவளே

எரிந்து உருகும் மெழுகுதிரியும் அவளே
ஓயாது வீசும் கடல் அலையும் அவளே
பகலில் அதிகாலை சூரியனும் அவளே
இரவில் உலாவரும் நிலவும் அவளே

அம்மா என்ற சொல்லில் அகிலமும் அடங்குமே
உயிரும் மெய்யும் உயிர்மெய்யும் கலந்த சொல்லும் அது தானே!!!

கவிதையாக்கம்
எஸ்.பி.மாலிக்
திருவை

எழுதியவர் : malikmohamed malik (27-May-15, 12:32 pm)
சேர்த்தது : மாலிக்முஹம்மது
Tanglish : amma en uyir
பார்வை : 155

மேலே