அவள் அப்படித்தான் பொள்ளச்சி அபி சிறு கதைகள் திறனாய்வு போட்டி

ஒரு படைப்பாளருடைய வாழ்வின் அனுபவங்கள் தான் கதை ,இலக்கியம் இயற்றுவதற்கு பாடு பொருள் ஆக அமைகின்றது.

கவிக்கோ பொள்ளாச்சி அவர்களின் " அவள் அப்படித்தான் " கதையில் வரும் நிகழ்வு ஒரு பெண்ணின் வாழ்க்கை பற்றி அழகாய் சித்திரித்துள்ளார்.

இந்த்க் கதையில் வரும் காமாட்சி பெண் பாத்திரம் கணவன் மகன் இருவரும் கைவிட்டபடியால் கணவர் பார்த்த கசாப்பு கடையை காமாட்சி அம்மாள் நடத்தி வாழ்க்கை வண்டி யை ஓட்டி காலம் தள்ளுகிறாள் யென்பதை ஆசிரியர் அபி மிகுந்த மன தைரியம்
உள்ள பெண்மணி யாக சித்தரிக்கிறார்.

சாலையில் வாகன விபத்தில் அடிபட்டு அரசு மருத்துவ மனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள்.
அவரை பார்க்க வந்த பெண்கள் "ஒரு பொம்பளை யா இருந்து எத்தன உசுர கொன்னு ருப்பா ? இவளுக்கு எல்லாம் இந்த கெதி வராம? என கோபம் கொள்வது எதார்த்தமாய் பெண்களை பற்றி ஆசிரியரின் நடை இருந்தது.

தன்னை ஆளாக்கிய ஆத்தாவை அவர்கள் ஏசியது கண்டு அழுத கோபால் கோபத்த அடக்கிக் கொண்டான் .இதன்படி அவர்கள் இருவரது பாசம் வரிகளில் மனதை தொடும்போது ஆசிரியர் உயர்ந்து நிற்கிறார்.

ஆத்தா கோபால் நினைவை அசைக்கும போது " எப்பவும் சரியா இருக்கனும்னு நினக்கிறவகளதா இந்த ஒலகம்
தப்பானவங்கன்னு சொல்லுது" எனும் ஆத்தாவின் வரிகளில் ஆசிரியர் நம் மனதை நெகிழச் செய்கிறார்..

"தம்பீ! ஆத்தா இருக்கிற வீ ட்டயும்
ரெண்டு லட்சம் ரூபாயும் உன் பேர்ல ஆத்தா எழுதி வச்சிருக்கு " என்ற ஆபிசரிடம் .,

" அதெல்லம் எனக்கெதுக்கு ஆத்தா க்கு ஆபரேசன் க்கு
செலவு பண்ணுங்க "என கோபால் சொல்லும் போது ஆசிரியரும் நம் மனதை தொட்டு விடுகிறார்.

புரியாதவங் களுக்கு புதிராய் அவள்
புரிந்தவங் களுக்கு
புனித மானாள்.
எனும் வரிகள் ஆசிரியரை மென்மெலும் சிகரம் தொட வைக்கிறது.

எமது சொந்த படைப்பு
அன்புடன்
ஜெயராஜரெத்தினம்.

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (27-May-15, 12:39 pm)
பார்வை : 226

மேலே