இது தான் விதியாபொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி
மனதில் தோன்றும் பல எண்ணவலைகளுக்கு பதிலளிக்கும் பொருட்டுதான் சிறுகதைகள் படைக்கப்படுகிறது.'இது தான் விதியா....?' கதையின் தலைப்பே வாசகனின் மனதில் பல கேள்விகளை ஏற்படுத்தி கதைக்குள் என்னதான் ஒழிந்திருக்கிறது என்ற ஆவலால் தொடர்ந்து படிக்கச்செய்கிறது.அதற்கேற்றால் போல் கதையும் மிக நேரான நடையில் தளம்பல்களின்றி ஓட்டிச்செல்லப்படுகிறது.
கதையின் தொடக்கம் மலருக்கு ஏற்ற வண்ணம் போல் புதைக்கப்பட்ட கருவிற்கு ஏற்றால் போல் உள்ளது.
"நான் இங்கே வந்த புதிதில்,சாலையின் இருபுறங்களிலும் உள்ள தோப்புகளும், தோட்டங்களும்,விலைநிலங்களாக மாறி,வீட்டுமனைகளாக வேகமாக மாறிக் கொண்டு இருந்தது.பலர் நிலம் வாங்கிய கையோடு வீடுகளையும் கட்டத்துவங்கியிருந்தனர்."என்ற வரிகள் உலகின் நிகழ்கால நிதர்சனத்தை சிறப்பாய் உணர்த்தி நிற்கிறது.மனிதர்கள் கரைகடந்து சென்றாலும்.....,அயல் ஊர் சென்றாலும் புதிய பழக்கங்கள் ஏற்படும் போது மனதுக்குள் ஏற்படும் சந்தேகமான ஐயத்தை மிக அழகாக வருடியிருக்கின்றார்.
கதையானது மனித உள்ளத்தில் தோன்றும் பல எண்ணங்களை அழகாய் சொல்லிக்காட்டுகிறது.மனிதர்கள் ஒருவனுடைய முகம்,நடை,குணம் என்பவற்றை வைத்தே அவர் எப்படிப்பட்டவர் என்பதை கணக்கிட்டுக்கொள்கின்றனர் என்ற அறிவியல் மரபை பிரதிபலிக்கும் வண்ணம் கதையின் பாத்திரத்தை சித்தரிக்கும் வரிகள் மிகவும் நேர்த்தியாக பொருந்தியுள்ளது.
தொடர்ந்து உழைப்பின் மூலம் ஏற்படும் உயர்வினை மிகவும் சிறப்பாய் பரமசிவம் மூலம் கதை நகர்த்திச்செல்கிறது.இருந்தும் நேர்மையான உழைப்புக்கள் சமுதயத்திலுள்ள பல பாவிகளால் கலவரங்கள் மற்றும் ஏனைய சதிகார செயல்கள் மூலம் முடக்கப்பட்டு உயிர்கள் பறிக்கப்படுவதை
கதையின் வளர்ச்சி பெரிதும் தாக்கம் செலுத்தி இறுதி வரை நகர்த்திச்செல்கிறது,
இறுதியாய் 'இது தான் விதியா....?' என்ற தலைப்பிற்கு ஏற்றால் போல் சதிகாரர்களால் உயிர் பறிக்கப்படும்
கதாபாத்திரத்தின் கண்ணிமைக்கும் நேரத்தில்.., “அம்மா..” அவன் முந்திக் கொண்டு எனது கால்பகுதியில் வெட்டியதில்..நான்தான் அலறினேன்.வலியால்
உயிரைப் பிடுங்கும் எனது மரணஓலம் மட்டும் காற்றின் வழியே பரவி மற்றவர் காதில் விழுமென் றால்,ஊரே அங்கு திரண்டிருக்கும். ஆனால் அதுதான் எப்போதும் நடக்காதே..!
அதற்குப்பின்,அவர்கள் மளமளவென்று என்மீது ஏறி,ஆங்காங்கே கயிறுகளால் பிணைத்து என்னை துண்டுதுண்டாக அறுக்கத் துவங்கினார்கள். முப்பதாண்டுக் காலத்தின் எனது நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக மங்கத்துவங்கியது.!"மேற்படி வருடல்கள் மனதை ஆணியால் துடைத்து கதை சுமந்து வந்த
கருவை உள்ளத்தில் புதைத்து 'இது தான் விதியா?'என்ற தலைப்புக்கு வாசகனிடம் பதிலை கேட்டு நிற்பது போல் கதையை எழுத்தாளர் படைத்துள்ளார் என்பது அவர் கையாண்ட உத்தி எனலாம்.
மேற்படி திறனாய்க்கட்டுரை என் சொந்த படைப்பு என்பதை உறுதிப்படுத்துகிறேன்
எழுதியவர்:மு.ஹ.மு. ஸர்பான்
இடம்:ஓட்டமாவடி-03 இலங்கை
தொலைபேசி இல:94 756795952
தேசிய அடையாள அட்டை இல:972410063V