அபியின் சிறு கடை விபத்து -ஒரு கண்ணோட்டம்
இந்தக் கதை இன்றைய நவீன சமுதாயத்தில் வீட்டிற்கு வீடு வாசப்படி
என்ற பழமொழிக் கிணங்க நடக்கும் ஒரு விஷயமே.ஒன்று வீட்டிற்கு வந்த
நாட்டுப் பெண்ணை (மருமகளை) கொடுமைப் படுத்தும் மணமகனின் பெற்றோர்கள்/
கூடப்பிறந்தவர்கள் அல்லது கணவனின் பெற்றோரை,மட்டு மரியாதை இன்றி நடத்தும்
மருமகள் -இவைகளால் வெடிக்கும் பிரச்சனைகள் இவற்றைப் பின்னே வளர்ந்த கதைகள்
எத்துனை எத்துனை ,அவற்றில் ஒன்ரு தான் அபியின் இந்த சிறுகதை .உது
இந்த சிறுகதையில் அபி நமக்கு தெரிவிக்கும் ஒரு எதார்த்தமான ஆனால் அதே சமயம்
நாம் அனைவரும் செவிகொடுத்து கருத்தில் வைக்க வேண்டிய விஷயம் ஓன்று உள்ளது
அதுதான் மூப்பு என்பது எல்லோரையும் ஒரு நாள் தப்பாமல் தழுவிக்கொள்ளும் ;இன்றைய
இளைஞர் நாளைய முதியவர் -இடை அனுசரித்து நாம் ஒருவர் ஒருவரை சரியாக புரிந்துகொண்டு
பரஸ்பர மரியாதையுடன் வாழ்க்கை சக்கரத்தில் சுழல வேண்டும்.
கதையில் பாலாவின் மனைவி பாலாவின் தாய் -தந்தையரை தன பெற்றோருக்கு சமமாக
எண்ணாமல் ஒரு குடும்ப சுமையாக தப்பாக எண்ணியதால் புது மன மோகத்தில் இருந்த
கணவன் மனதில் துர் போதனை செய்து அவனும் தாய் தந்தை என்று ஆண்ட புனிதா உறவை
ஒரு நிமிடம் பாராமல் , அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்க அவன செய்து விட்டான்.
ஆனால் கே கொடிய விதி யாரை விட்டது ; ஆண்ட இரு இளசுகளையும் தண்டித்து விட்டது ; பாலன்,
ஆண்ட விபத்தில் முடவன் ஆனான், அவன் மனைவி கண்களை இழந்தாள்.கலியுகத்தில் தெய்வம்
தண்டனையை அப்போதைக்கு அப்போதே அளித்து விடும் போலும் !
தங்கள் கை வசம் இருந்த சொத்தை விட்டரு மகன் பாலனுக்கு அவன் விரும்பிய போலீசு வேலைக்
கிடைக்க வழி செய்தனர் . பின்னர் அவன் தங்களை முதியோர் இல்லம் சேர்த்தும் ,வழியில் கோர
விபத்தில் சிக்கி கால்களை இழந்து ,மனைவி கண்களையே இழக்க அவர்கள் மீது
கருணைப் பார்வை ஒன்றையே வீசி , மணமகளுக்கு தான் இறக்கையிலே கண்களை கொடுத்ததும் ,மகனுக்கு தன் வசம் இருந்த பணத்தை எல்லாம் தந்த அந்த தாய்-தந்தையர் இறைவனுக்கு ஒப்பானவராக ஆசிரியர் அபி உயர்த்தி விட்டார்.இது கண்கூடாக நடக்க கூடிய சம்பவமே .
இது மாதிரி கதைகளை படித்த பின்னாவது மக்கள் திருந்துவார்களா ? திருந்தினால் அது அபி போல் எழுத்தார்களை குளிரவைக்கும் ;சிறந்த மாமியார்-மாமனார் -பிள்ளை -மணமகள் உறவை பேனே நிலை நிறுத்தும் .
அபியின் இந்த கடைக்கு என் பாராட்டுக்கள் .
-----------------------------------------------------------------------------