என் அன்பு தங்கைக்கு - உதயா

நான் தத்தி தவழும் வயதினில்
தாய் மடியினில் அமரும் போது
அம்மாவின் வயிற்றில் இருந்தே
என்னை மெதுவாய் தொட்டு ரசித்தாள்...!

அவள் பார் காணா முன்னே
எம்மை பரவசத்தில் ஆழ்த்தி
மனதில் ஏக்கங்களை தூவி விட்டு
அன்பெனும் விதையினை நடவள் செய்தாள்...!

என் குடும்பமெனும் நந்தவனத்தில்
பொளிவிழந்த புன்னகை பூக்களை
பிறந்த கனத்திலே உணர்வளித்து
பொளிவூட்டி ஜொளிக்க வைத்தாள்...!

அவள் திக்கி திக்கி
அழகாய் பேசும் வயதில்
அண்ணா அண்ணா என்றழைத்து
ஆனந்த கடலில் மிதக்க வைத்தாள் ...!

அவள் செய்த சின்ன சின்ன
குறும்புகளில் விரிவடைய தொடங்கியது
என் குடும்பத்தில் அன்பு அருவிகளும்
தென்றலின் வருகைகளும் ...!

அண்ணனான என்னனையே
அவள் தம்பி என்றழைக்கும் போது
தமக்கை குறையினை தீர்த்து என்னை
தரணியில் மிதக்க வைத்தாள் ...!

உதயா உதயா என்றழைத்து
அவள் ஊட்டிய ஒருவாய் சாதத்தில்
நான் மழலையாய்தான் மாறியிருந்தேன்
அவள் எனக்கு அன்னையாகவே மாறிவிட்டாள்...!

என் மனவானத்தின் தேவதைக்கு
இன்றுதான் தொடங்குகிறது வயது பதினாறு
அவள் நிச்சயம் புரிவாள் வையகத்தில்
பல சாதனை வரலாறு ...!

நீலவான் திரையையும்
பவள மல்லி மலரினையும்
அன்பு நூலில் ஆடையாக்கி .....

புவி கண்ணை பறிக்கும் மின்னலை
மங்கையர் மனதினை பறிக்கும்
கழுத்து அணிகலனாக்கி.....

அந்த எழுவண்ண வானவில்லில்
வெண்ணிறத்தைக் களவாடி
முத்தினை திணித்து கொளுசாக்கி....

ஒரு அண்ணனாய்
சிறு அன்பு பரிசளித்தேன் ...!


அனைத்தினையும் அணிந்துவந்து
அவள் அண்ணா என்றழைத்தபோது
ஆனந்த பூரிப்பில் வியந்து
ஒரு கணம் நானே கண்வைத்து விட்டேன் ...!

அந்த வெண்ணிலவு காவல் தோட்டத்தில்
விண்மீனின் பூக்களை பறித்துவந்து
அவள் கார்முகிலில் திணித்து
கண் திருஷ்டியை கையித்தேன் ...!

அவள் என் அன்பு செல்லம்தான்
வருங்கால அகிலத்தின் இராணிதான்
அவள் என் வைரப்பட்டுதான்
இப்பாரினை ஆளவந்த சிட்டுதான்...!

அவள் எங்கள் குடும்பத்தின் குத்துவிளக்குதான்
ஈரேழு உலகினையும் காக்க போகும் ஒளிவிளக்குதான்
அவள் எனக்கு என்றும் மழலைதான்
இவ்வுலகில் என்றும் வாடாத மலர்தான் ...!

அவள் வாழ்வாள்
வாழ்ந்துக் கொண்டேயிருப்பாள்
வஞ்சமில்லா அன்பு மட்டும்
அவள் தேசத்திற்கு வருகை புரியும் ...!

அவள் வீருகொண்டு நடையிட்டாள்
விண்ணுக்கே அச்சம் பொங்கும்
அவள் கருணை குணத்திலே
காற்றும் கொஞ்சம் மயங்கும்...!

எவரும் எட்டாத புகழினை
அவள் மட்டும் அடைவாள்
எவரும் தொடாத உயரத்தை
அவள் மட்டும் தொடுவாள் ....!


( இன்று என் அன்பு தங்கைக்கு பிறந்த நாள் .. அவளுக்கு இந்த அண்ணனில் சிறு கவி பரிசு ..)

எழுதியவர் : udayakumar (28-May-15, 11:28 am)
பார்வை : 527

மேலே