இன்னும் விடியவில்லை

இரவு முழுதும்
தன் வீரியம் மறைத்து
ஒதுங்கி நின்ற ஆதவன்
மறைந்து விட்டான் என்றே
ஆர்ப்பரிக்கும் தவளைகள் கூச்சல்
குறையத் தொடங்கும்
அதி காலை நேரம்..

எழுகின்ற ஆதவனின்
கிரணங்கள் பட்டை பட்டையாய்
வானத்தில் கோடு போட்டு
நிலமகளின் மீது போர்த்தும்
தங்க சரிகை பட்டுச் சேலை
பகல் பொழுது நுழைந்த பின்பு ..

இரவும் பகலும்
இரண்டும் ஒன்றாக
தோன்றுகின்ற ..இளங்கவிஞன்
காதல் வென்றான்
புரண்டு படுத்தான்..
கனவில் வந்த காதலியின்
கை பிடித்தபடி ..
இன்னும் ..
அவனுக்கு மட்டும்..
விடியவில்லை!

எழுதியவர் : கருணா (28-May-15, 10:10 am)
பார்வை : 159

மேலே