நான் நானாகிய நான்
காத்திருக்கிறேன்....
நிழல் தொலைவில் விழுகிறது இலை.
காத்திருக்கிறேன் நான்.
*************************************************************
எனக்கு உன்னைத் தெரியும்.
உனக்கு என்னைத் தெரியும்.
பிறிதொரு வேளையில்...
எனக்கு உன்னைத் தெரியாது.
உனக்கு என்னைத் தெரியாது.
தெரிந்தும்...தெரியாமலும்...
தெரிந்ததாய் செல்கிறது வாழ்வு.
**************************************************************************
நான் எழுதுகிறேன்...
நீ வாசிக்கிறாய்.
வாசித்த கணங்களில்...
நீ நானாகி விடுகிறாய்.
நான்தான்....
நீ ஆவதே இல்லை.
************************************************************************
நான்...
விருப்பங்களோடுதான் வாழ்கிறேன்.
இயல்பாய்...
எனது காலத்தின் முள்
விருப்பங்களாகவே அசைகிறது.
அன்றொரு நாள்...
நீ விருப்பங்களற்ற உலகம் குறித்துப் பேசினாய்.
விருப்பங்களற்ற உலகில்...
நான் எங்ஙனம் வசிக்கக் கூடும்.
***********************************************************************