பூஜைகள் உனக்காக
காதல் சிறையினிலே மனம் கசிந்துருகி
தினம் தடம் வழுவி-நான்
மெல்லச் சாகின்றேன்
விழியின் தேடலில்
தினமுனைக் காண என்
மனதில் ஆசை கொண்டேன்
கலையும் கனவாய் காதலில்லாமல்
மலரும் மலராய்
மணம் வீசாதோ
இமைகள் மூடாமல் விழியும் தூங்காது,
உன்னைப் பாராமல் எந்தன்
மனமும் தாங்காது
காற்று வீசாமல் அணுவும் அசையாது
காதல் சேராமல்-எந்தன்
உயிரும் வாழாது
கனவை கடந்து கலப்போமோ!
கரையைப் போல
என்றும் நனைவோமோ!
விழியின் எதிரில் நீ இருக்க - என்
மனதின் பூஜைகள்
உனக்காக.