காலம் தாழ்த்தாய் வா
விடிகையிலே எழுகிறேன்
வளையல்கள் உனக்குச் சூட!
காகிதங்களில் கவிதை வடித்து
கண்ணீரால் காதல் வளர்க்கின்றேன்
கற்பனையில் சிறகடித்து
ஒப்பனையில் காதல் சொல்கின்றேன்
கனவுகளை நிஜமாக்கி வருகின்றேன்
காதலியே உனக்காக!
கலையும் கனவாய் மட்டும் நீ இராமல்
காதல் வளர் கவித்தமிழாய் வா
கானல் கண்டு ஏமாற்றம் கொண்டயெனை
காதல் ஊற்றி மாற்றம் செய்வாய் வா!
காலங்கள் கடக்கிறதடி கண்ணே
காதலை வேகம் கொண்டுவா!
காயங்கள் ஆனதடி உள்ளம்
காதல் மொழி கொட்டி விடு
காற்றை வெறுத்திருந்தேன் பெண்ணே-இனியும்
காலம் தாழ்த்தாய் வா!!