இவன் பித்தனாக ~ சந்தோஷ்

இவன் பித்தனாக  ~  சந்தோஷ்

உஷ்.!. யாரும்தொடாதீர்கள் !
எனது காதல் புத்தகத்தை..!
நான் பதுக்கிவைத்த
கனவு மயிலறகு
பிரசவ வேதனையிலிருக்கிறது. !

----

அடேய் ! துரோகியே!
என் பின்னால் வாராதே !
என் நிழலை
நீ மிதித்தால்
அழுதுவிடும் என் நிஜங்கள் !

----

அடியே !
என் காதலியே!
நான் உனக்கு கொடுத்த
கணக்கற்ற முத்தத்தை
திருப்பிக்கொடு..!
ஈரமற்றவளிடம்
ஈரமுள்ள என் முத்தமெதற்கு ?

----

என் நட்புப் பேனாவிற்குள்
சிலச் சொட்டு
தோழ’மை ஊற்றுங்கள்
தோழர்களே !
என்னிதயப் பறவைக்கு
வானம் தேவைப்படுகிறது.

---

அங்கே என்னச் சத்தம்
கவிப்பேரரசு வைரமுத்துவே ?
கொஞ்சம் பொறு !
போட்டி வைத்துக்கொள்வோம்.
உன்னை மடியிலேந்திய
தமிழன்னை
என் சுண்டு விரலையாவது
பிடிக்கதான் போகிறாள்.

--
சரித்திரத்தை திருப்பி
வழக்குத் தொடுப்பேன்!
ஆசைகள் துறக்க
ஆசைப்பட்ட புத்தன்
ஆசை துறந்தவனா?

---

-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (30-May-15, 8:17 pm)
பார்வை : 120

மேலே