நிலாச்சோறு
ஹைவே சாலை வேகம்
அனாதையாக உயிர் போகும்!
அடக்கம் செய்திட ஆளின்றி
நிலா சோறு உண்டது பிணந்தின்னிக்கழுகு!
பரபறக்கும் நகரவீதீ
பகலிரவு அறியா உலகு!
நடுநிசியில் பசியைதீர்க்க
நடுதெருவில் உண்டது நிலாச்சோறு!
முழு பௌணர்மி நிலவினிலே
முழுமனதும் நித்திரை கனவினிலே
திடுமென பரபரப்பின் நடுவினிலே
சுற்றிவளைத்தது சுனாமி!!
ஓ...கடலுக்கும் நிலாசோறு உண்ண ஆசையோ!!?