ஒர் உண்மை

மெய் சிலிர்க்க வைப்பது உண்மை
மெய் அடங்கி ஒடுங்க வைப்பது பொய்
உண்மை என்பது ஒன்றே ஓன்று
பொய் ஒன்றிற்கு பத்து சேர்ந்து வரும்
உண்மை அழிக்க முடியாத செடி
பொய் அழிக்க அழிக்க முளைத்து வளரும் செடி
பொய் மனிதனை பித்தனாக்கி விடும்
உண்மை மனிதனை உத்தமனாக்கி விடும்

எழுதியவர் : பாத்திமாமலர் (1-Jun-15, 1:42 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 147

மேலே