இயற்கை

மாணிக்கத்தை தேடி
அலைவதை விட்டு
மணியான அரிசியை
பயிர் செய்திடு ..

பவளத்தை தேடி
அலைவதை விட்டு
பச்சை காய்கறிகளை
பயிர் செய்திடு ...

கோ மேதகத்தை தேடி
அலைவதை விட்டு
பால் தரும் கோ மாதாவை
வளர்த்திடு ....

முத்தை தேடி
அலைவதை விட்டு
கடல் வாழ் உயிர்களை
வளர்த்திடு ....

வைரத்தை தேடி
அலைவதை விட்டு
வைரம் பாய்ந்த
மரங்களை காத்திடு ..

மரகதத்தை தேடி
அலைவதை விட்டு
மங்களகரமான மஞ்சளை
பயிர் செய்திடு ...

எழுதியவர் : கவி ஆறுமுகம் (4-Jun-15, 12:49 pm)
Tanglish : iyarkai
பார்வை : 239

மேலே