குழப்பமான இரவு

கடலில் மிதக்கும்
கட்டுமரப் பயணம்தான்
வாழ்க்கை...
இதில்..
தூக்கிவீசும் சூறாவளி போல்
சில துன்பங்கள்..
சுருட்டி இழுக்கும் சுழல்குழி போல்
சில துன்பங்கள்..
துண்டாக்கத் துடிக்கும் சுறா போல்
சில துன்பங்கள்..
இப்படி பல துன்பங்கள் கடந்தும்
கரைசேர கலங்கரை விளக்கின்றி
உப்புக் காற்றில் உறைந்து கிடக்கும்
பலரது வாழ்க்கை..
என்னவென்று தெரியவில்லை
வராத உறக்கம் சுமக்கும்
கண்களின் முன்பு
தேயாத நிலவு..
நான்..
குழப்பமான இரவின் மடியில்
துன்பத் தூரல்களின் பிடியில்...
செ.மணி