யாரது

தொலைவாய் ஒரு குரல்
மெதுவாய் நகர்ந்தேன்
அழுகையில்லை சிரிப்புமில்லை
கதறல் இல்லை உளறலுமில்லை
யாரது......?

அடர்ந்த இருளுக்குள்
தொடர்ந்து கேட்கிறதே
என்ன அது........? ஏதோ ஒரு ஏக்கம்
நீண்ட நாள் தேக்கம்
வெளிபட்டுக்கொண்டிருக்கிறது

அடடா ஆம் அதோ யாரோ
மங்கலான முகம்
அருகில் இரு சிறகுகள்
பறக்க முயன்று வீழ்ச்சி
உடனே ஒரு புலம்பல்
மீண்டும் முயற்சி
மீண்டும் தோல்வி அதே புலம்பல்
அருகில் சென்று நான்
யாரடா நீ...?
அதிர்ச்சி கண்ணாடிக்குள்
என் பிம்பம்

எழுதியவர் : கவியரசன் (4-Jun-15, 8:35 pm)
Tanglish : YARATHU
பார்வை : 74

மேலே