கான்க்ரீட் குளவிகள்
மரம் உதிர்த்த
இலைச் சொல்லின் மேல்
மௌனத்தைப் பகிர்ந்தபடி
நடந்து செல்கிறது வெய்யில்.
காற்றின் அசைவில்
உதிர்ந்த சிறகுகள்
முகமற்ற வண்ணத்துப் பூச்சியை
ஞாபகப் படுத்துகின்றன.
சொல்லாமல் விடைபெற்ற
அந்தியின் கீற்றுகள்
மஞ்சள் பூசித் திரிகிறது
நிலவின் முகம் வளரும் பாதைகளில்.
எதையும் இரசிக்க இயலாமல்...
கான்க்ரீட் குளவியென
நகரத்தின் அடுக்குகளில்
நசுங்குகிறேன் நான்.