என்னவளோடு என்றும் நான் - உதயா

எங்கே எந்தன் தேவதை
எங்கே எந்தன் தேவதை
காயத்தை காற்றில் கரையவைத்தாள்
காமத்தை காதலால் முறியடித்தாள்

துன்பத்தில் வாழ்ந்தவன்
இன்பத்தில் மிதக்கிறேன்
தோல்வியை அடைந்தவன்
வெற்றியை சுவைக்கிறேன்
உன்னால்தானம்மா எல்லாம்
உன்னால்தானம்மா

அந்த வானிலும் உயர்ந்தது
நம் காதல்
இப்பாரிலும் சிறந்தது
நம் காதல்
காலன் உன்னை அழைத்தால் என்ன ?
என்னிடமிருந்து உன்னை பிரித்தால் என்ன ?
என்றும் நீதான் எனக்கு மனைவியடி
என்றும் நீயே எனக்கு உயிருமடி

பிரிவொன்று நமக்கிங்கு இல்லையடி
நாம் துடிப்பதும் தனி இதயத்தில் இல்லையடி
நீ பிரிந்தாலும் மறைந்தாலும்
என்றும் துடிக்கும் நம் காதல் இதயமடி
அதில் என்றும் தொடரும் நம் காதலும்டி

பறவைகள் காற்றினில் பறக்குதடி
இதில் வலியொன்றும் காற்றிக்கு இல்லையடி
உன் நினைவுகள் என் நெஞ்சினில் வாழுதடி
இதில் பிரிவொன்றும் எனக்கிங்கு தோன்றலடி
நான் வாழ்ந்தாலும் மாய்ந்தாலும்
என் இதயம் என்றும் துடிக்குமடி
உன்னை நினைத்தே நொடியையும் கடக்குமடி

பூக்களும் புவியினில் பூக்குமடி
தென்றலும் நீரினில் பிறக்குமடி
இவைகள் இணைந்தே
ஒன்று சேர்ந்தே
என் கல்லறையை வந்து சேருமடி
என் காதலே உயர்வென பாடுமடி
உன் காதலே உயர்வென பாடுமடி
நம் காதலே உயர்வென பாடுமடி

இந்த ஜென்மத்தில் நெடும்பயணம்
நமக்கில்லையம்மா
மறுஜென்மத்தில் நிச்சயம்
பிறப்போம்மம்மா
நீ என்று பிறந்தாலும்
எங்கு வாழ்ந்தாலும்
உன்னை தேடி
நானும் வருவேனம்மா
நம் காதல் என்றும் தொடரும்மம்மா


(((((( ******************************************)))))
காதல் காமத்தின் எதிர்பார்ப்பு அல்ல
காதல் காசு பணத்தின் மோகம் அல்ல
காதல் உறவுகளின் புன்னகைக்காக பூப்பது அல்ல
காதல் மிரட்டலுக்காக அடிபணியும் கூண்டு கிளியல்லா
காதல் சாதி சண்டையில் புரண்டுவோடும் குருதி ஆறும் அல்ல
காதல் உருவத்தை பார்த்து வருவது அல்ல
காதல் நிறத்தினை பார்த்து வருவது அல்ல

காதல் இரு ஜீவன்களின் புரிதலில் பிறப்பது
பிரிவு என்ற சொல்லுக்கு அப்பார்பட்டது
மனதில் நினைதவனுக்காகவே/நினைத்தவளுக்காகவே
இறுதி காலம் வரை வாழ்வது
காதல் காமம் மோகம் அதனையும் தாண்டி புனிதமானது

காதல் என்ற அகராதியில் தற்கொலை என்ற சொல்லேயில்லை
தற்கொலை என்ற சொல் பிறந்துவிட்டால் அது காதலேயில்லை

((((((*************************************************)))))
என்றும் என்னவளை நினைத்தே
என்னவளுக்காவே வாழும்
என்னவளின் காதலன் உதயா ......

என்னுடைய கண்ணீர் துளிகள்
காலன் நெருங்க நினைக்கும்
என்வளின் கால்களுக்கு சமர்ப்பணம் .........

((((******************************************************))))

எழுதியவர் : udayakumar (5-Jun-15, 5:14 pm)
பார்வை : 262

மேலே