உன்னால் உண்டான காயங்கள் - சகி

என்னவனே ....
என்னை முழுவதுமாய்
உணர்ந்த என் உணர்வுகள்
நீ மட்டுமே என எண்ணினேன் ...
முகமறியா உறவுகளை
எண்ணி என்னை ஏளனம்
செய்கிறாய் ....
உணர்ந்துக்கொண்டேன் முழுமையாய் ...
நீ என்னை என்றுமே
உணரபோவதில்லை என்று ...
என் கண்ணீர்த்துளிகள்
தினமும் என்னுடன்
உறவாடிக்கொண்டு தான்
இருக்கிறது ....
நீ தரும் காயங்களால்
உன் நினைவில் ....