இந்த காதலுக்கு அறிவே இல்லை

"இந்த டிரஸ் நல்லாருக்கா"
ஆர்வமாய் நான்
"புடவை தான் அழகு உனக்கு"
சரியாக கூட பாராமல் நீ :-(

"புரியலைடா"
சம்மந்தமில்லாமல்
நீ அனுப்பிய குறுஞ்செய்திக்கு
பதிலாய் நான்
"சாரிடீ தவறுதலா அனுப்பிட்டேன்"
கூலாக நீ :-(

"யாருக்கிந்த கவிதை"
ஆசையாய்
உன் காதல் கவிதை
படித்தபடி நான்
"நானும் xxx
காதலிச்சிருந்தா
இப்படி தானிருக்கும்"
இயல்பாய் நீ :’(

"ஹாய்"
ஆர்வமாய் நான்
"கொஞ்சம் வேலை இருக்குடா"
ஆன்லைனில் இருந்தபடி நீ :-(

"என் கவிதை நல்லாருக்கா"
உனக்கான கவிதையோடு நான்
"ஓ சூப்பர்"
"எந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு"
"இன்னும் சரியா படிக்கலைடா"

உன் இயல்புகளில்
உனை
கடந்து கடந்து
இதோ வந்துவிட்டேன்
உனை எட்டா தூரத்திற்க்கு

"ஹஹாஹா"
எக்களிப்பாய் நீ

"யார் சிரிப்பது,
ஓ நீதானா..
இத்துணை சந்தோஷமா உனக்கு
உனை பிரிந்ததில்"

உனை திரும்பி பார்த்ததில்
அதிர்ந்து தான் போனேன்

ஆஹா என் (மானங்கெட்ட) மனம்
இன்னும் அங்கேயே
உனை
இருக அனைத்தபடி நிற்கிறதே..

"இந்த காதலுக்கு அறிவே இல்லை"
தலையில் அடித்தபடி நான் ;-) ..

எழுதியவர் : மகாலட்சுமி (6-Jun-15, 6:03 pm)
பார்வை : 125

மேலே