சாப விமோசனம்
சாபம் பெற்ற அகலிகை
கல்லானாள்
சாப விமோசனம் கொடுத்த
ராமன் கல்லானான்
கடவுளாக !
அவை நடுவே பாஞ்சாலி
கண்ணா கண்ணா என்று
அழுது புலம்பினாள்
துவண்டு விழுந்தான்
துச்சாதனன்
ஆடை வளர்த்தான்
கண்ணன்
மானம் காத்தான்
அன்று ஆடை ஒளித்தேன்
இன்று ஆடை வளர்த்தேன்
பெண்ணுக்கு மானம்
பெரிதென்று காட்டவே
என்றான் ஞானக் கண்ணன் !
____கவின் சாரலன்