ஓடுஉடைந்த வாழ்வு
முட்டையின் ஓடுடைத்து
வெளியேறுவது ..
இன்பம்தான்..
புது ஜீவனாக வாழ
புறப்படுவோம் என்றால்..
இன்னொருவன் வயிற்றுக்கு
கம்பி வேலிக்குள்..
இன்னுயிர் நாட்டை விட்டு ..
இலக்கின்றி திரிவதற்கும்
இருப்பதை இழந்து
இல்லாமல் போவதற்கும்
முட்டையின் ஓடு உடைக்கப்பட்டு
வெளியேற்றப்படுவது
துன்பமா ..
கொடுமையா..?