கடல பருப்பி

கவிதை ஒன்னு எழுதிபுட்டு காத்திருக்கேன் பல நாளா..
படிக்க மட்டும் வாயேன் மா.. பாத்து பாத்து வளத்தவளே..

வெகு தூரம் தள்ளி வந்து.. குளுகுளுன்னு நான் இருக்க..
வெந்துபுட்டு இருக்காளோ.. குமரனுக்கு சேத்தி வெக்க..

வேலை இல்லா காலம் ஒன்னு.. எனக்கிப்போ நினைவுண்டு..
திட்டிகிட்டே எழுந்து வந்தேன்.. எட்டு மணி வெயில் காண..

சோத்து போசி தூக்கிகிட்டு தெரு முனைய தாண்டிபுட்டு..
ஒரு ஓட்டம் பிடித்தாயே.. செத்துபுட்டேன் அப்பொழுதே..

காது கழுத்து மூக்கு சுத்தி.. தங்கமுன்னு ஏதும் இல்ல..
கடல பருப்பி வாங்கி வருவா.. தங்கத்துக்கு புடிக்குமுன்னு..

ஏதேதோ படிக்க வெச்ச.. எதையெதையோ வாங்கி வெச்ச..
எட்டு திக்கும் சுத்த வெச்ச.. எலும்பு தேய சமைச்சு வெச்ச..

இருந்தாலும் உனக்குன்னு.. நான் எதுவும் வெக்கலயே..
இருந்தாலும் சிரிக்குரியே.. எம்புள்ள வாழுது-ன்னு..

எழுதியவர் : பிரேம் குமார் (8-Jun-15, 7:41 am)
பார்வை : 197

மேலே