வலிகள் - சகி

என் வாழ்க்கை
கதறும் என் இதய
வலிகளுக்கு என் விழிகளின்
கண்ணீரே ஆறுதலாய் ....
தோல்வியை தழுவியே
என் வாழ்க்கைப்பயணம் ..........
ஏமாற்றங்களும் வலிகளும்
என் உண்மையன்பிற்கு நான்
பெற்ற பரிசுகள் ....
பொக்கிஷமாய் எல்லாம்
என் மனதில் ஆறாத
தழும்புகளாக ...
மாறும் நிலையை
எண்ணி நான்
காத்துக்கொண்டே ....
என் கல்லறையில் .....