உன்னை நினைத்து வாழும் ஓர் உயிர் 555

பிரியமானவளே...
கடலின் அலைகள் கரைக்கு
மீண்டும் மீண்டும் வருவது போல்...
உன்னை பற்றிய
நினைவுகள் மட்டும்...
மீண்டும் மீண்டும் வந்து
போகிறது என்னுள்...
நான் செத்து கொண்டு
காதல் மட்டும் எப்படி சாகாமல்...
நீ என்னை பிடிக்கவில்லை
என்றபோது...
வெண்ணிலவும் பிடிக்கவில்லை
விடி வெள்ளியும் பிடிக்கவில்லை...
உன்னிடம்
காரணம் கேட்கும்போது...
நீ கொடுப்பதோ மௌனம்
மட்டும் தான்...
உன் மௌனத்தில் கூட
புதிய மொழி பிறக்குதடி...
உன் மௌனத்தை
மொழி பெயர்க்கும்...
மெளனமொழிதான் எனக்கு
தெரியவில்லை இன்றுவரை...
உன்னை மட்டும்
நினைத்து.....